உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க...காய்கறி ஜூஸ்கள்!!!

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க...காய்கறி ஜூஸ்கள்!!!

காய்கறி ஜூஸ்கள்

பழுத்த பழங்களை ஜூஸ் போடுவது போன்று நல்ல நிலையில் உள்ள காய்கறிகளை ஜூஸாக குடிக்கலாம். சுவைக்கு உப்பு போடலாம் என்றாலும் பச்சையாக குடிப்பது இன்னும் நன்மை பயக்கும். மேலும், இதனை கோடை காலத்தில் மட்டுமின்றி எந்த பருவத்திலும் பருகலாம்.கேரட் ஜூஸ்: இதை குடிப்பதால் சருமம் பளபளக்கும். அதுமட்டுமின்றி கண்பார்வைக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது. தக்காளி ஜூஸ்: இதில் அதிக ஊட்டச்சத்து உள்ளது. மேலும், இதயத்திற்கும் நல்லது. பீட்ரூட் ஜூஸ்: இதில் வைட்டமிண் சி மற்றும் கே அதிக உள்ளது. எனவே, உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. கீரை ஜூஸ்: இதில் வைட்டமிண் ஏ, சி, கே ஆகியவை அதிகமாக உள்ளது. வெள்ளரிக்காய் ஜூஸ்: இது கோடைகாலத்திற்கு ஏற்றது. உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும்.கோடை காலத்தில் உடலுக்கு பல பழ ஜூஸ்கள் குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும். அதேபோல், சில காய்கறிகளையும் ஜூஸ் போட்டுக் குடிக்கும்பட்சத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

Tags

Next Story