சுண்டைக்காய்.. வியக்க வைக்கும் 5 அற்புத பொக்கிஷ நன்மைகள்

சுண்டைக்காய்.. வியக்க வைக்கும் 5 அற்புத பொக்கிஷ நன்மைகள்

சுண்டைக்காய்

சுண்டைக்காய் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு காய் ஆகும்.

சுண்டைக்காயில் இரும்புச்சத்து, கால்சியம், புரதச்சத்து போன்றவை அதிகளவு உள்ளது.

மேலும் இந்த சுண்டைக்காய் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதுடன் அஜீரணம், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.

எலும்புகளை வலுவாக்கும்: சுண்டைக்காயில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால், எலும்பு தேய்மானம், எலும்பின் உறுதித்தன்மை உள்ளவர்கள் கட்டாயம் வாரம் ஒருமுறை சுண்டைக்காய் சாப்பிடலாம்.

இதயத் தசைகளைத் தளர்வாக்கி இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க உதவி செய்கிறது.

சுண்டைக்காயில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான அமினோ அமிலங்களும் இதில் அதிகம்.

இவை இன்சுலின் உற்பத்தி மற்றும் குளுக்கோஸ் உறிஞ்சுதலை கட்டுப்படுத்துகிறது.

ரத்த சர்க்கரை அளவு உயராமல் பார்த்துக் கொள்ளும்.

இவை உங்கள் பசியை தூண்டுவதில் சிறப்பாக செயலாற்றுகிறது.

செரிமானமின்மை, வயிற்று மந்தம், வயிற்றுக்கோளாறு போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சுண்டைக்காய் நல்ல மருத்தாக செயல்படும்.

எனவே சுண்டைக்காயை வாரம் ஒரு முறையேனும் சமைத்து சாப்பிடவும்.

Tags

Next Story