புற்றுநோய் செல்களை அழிக்கும் மஞ்சள் ஆனா இந்த ஆபத்தெல்லாம் இருக்கு - யார் எடுத்துக்க கூடாது? | health tips | கிங் நியூஸ் 24x7

புற்றுநோய் செல்களை அழிக்கும் மஞ்சள் ஆனா இந்த ஆபத்தெல்லாம் இருக்கு - யார் எடுத்துக்க கூடாது? | health tips | கிங் நியூஸ் 24x7
X

மஞ்சள் குணங்கள் 

சமையலறையில் முக்கியமாகக் காணப்படும் பொருள் என்றால் அது மஞ்சள் தூள் தான். நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து தற்போது வரை மஞ்சளை சமையலில் பயன்படுத்தி வருகிறோம். மருத்துவ பண்புகள் நிறைந்த மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதில் உள்ள குர்குமின் என்ற ஆன்டி ஆக்ஸிடெண்ட் புற்றுநோயைக் கூட தடுக்கும் ஆற்றலைக் கொண்டது. மேலும், செல்களை சேதமடைவதையும் எதிர்த்துப் போராட மஞ்சள் உதவும். ஆரோக்கிய நன்மைகள் பல இருந்தாலும், மஞ்சளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் சில பக்க விளைவுகளும் ஏற்படும். அதனைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.


வயிற்றுப் பிரச்சனைகள் : அளவுக்கு அதிகமான மஞ்சளை எடுத்துக் கொள்வதால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். இதன் காரணமாக வயிறு வீக்கம், வயிற்று வலி, வயிற்றுப் பிடிப்பு போன்ற வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படும். சிறுநீரகக் கற்களை உருவாக்கும் : மஞ்சளில் ஆக்ஸலேட்டுகள் நிறைந்து உள்ளன. இவை, ஆக்ஸலேட்டுகள் இயற்கையாகவே தாவர அடிப்படையிலான உணவுகளில் அதிகம் காணப்படும்.


அதிக அளவில் மஞ்சளை உட்கொள்ளும்போது அதில் உள்ள ஆக்ஸலேட்டுகள் உடலின் கால்சியத்துடன் இணைக்கப்பட்டு, கரையாத கால்சியம் ஆக்ஸலேட்டுகளை உருவாக்கும். இவை தான் சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியக் காரணமாக அமையும்.

ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் அதாவது ஒரு நாளைக்கு 500 முதல் 2,000 மில்லி கிராம் வரை மட்டுமே ஒருவர் மஞ்சளை எடுத்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.


அதேபோல் இயற்கை வடிவில் கிடைக்கும் மஞ்சளை எடுத்துக் கொள்வதே நல்லது. சிலர் மஞ்சளை காப்ஸ்யூல், சப்ளிமெண்ட்ஸ் வடிவில் எடுத்துக் கொள்வர். இது தவறான வழியாகும்.மஞ்சளை அதிக அளவு எடுத்துக் கொள்வதால் சில நேரங்களில் வயிற்றுப் பிரச்சனைகள், குமட்டல் மற்றும் தலைச்சுற்றலுக்கு வழிவகுக்கும். இதுபோன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் உங்களின் உணவில் சேர்க்கும் மஞ்சளின் அளவை குறைக்க வேண்டும்.

Tags

Next Story