மழை காலங்களில் இந்த ஆரோக்கியமற்ற காய்கறிகள் சாப்பிட கூடாது !!

மழை காலங்களில் இந்த ஆரோக்கியமற்ற காய்கறிகள் சாப்பிட கூடாது !!

காலிஃபிளவர், ப்ரக்கோலி , முட்டைகோஸ், காளான் இந்த பூக்காய்கறிகளை மழைக்காலத்தில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த காய்கறிகள் எப்போதும் ஈரத்தன்மையுடன் இருக்கும். இது பாக்டீரியாக்களை எளிதில் வளரச் செய்யும் சூழல் கொண்டது. அதனால் மழைக்காலங்களில் இந்த வகை காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும்.


முளைகட்டிய பயறு வகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிக மிக நல்லது. மழைக்காலத்தில் எடுததுக் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். இந்த பருவ காலம் முழுவதுமே ஈரப்பதமாக இருக்கும். தானியங்கள் முளைகட்டுவதற்கும் ஈரப்பதமான இடம் தான் தேவை. அந்த ஈரப்பதம் பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் கூட தூண்டும். அது மோசமான நோய்த் தொற்றுக்களை உற்பத்தி செய்யும்.


கீரை வகைகள் அதிக சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.ஆனால் மழைக்காலங்களில் இந்த இலை காய்கறிகளைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இந்த இலை காய்கறிகளில் மிக வேகமாக கொசுக்கள் பரவும். எப்போதும் ஈரத்தன்மையுடன் இருக்கும் இந்த காய்கறிகளில் மழைக்காலங்களில் பூஞ்சை மற்றும் காளான் தொற்றுக்கள் அதிகமாக உண்டாகும். இது மிக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.


மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய காய்கறிகளில் முக்கியமானது வேர்க்காய்கறிகள். அதாவது முள்ளங்கி, கேரட், பீட்ரூட், நூல்கோல் உள்ளிட்ட வேரில் விளையும் காய்கறிகளைத் தவிர்த்து விடுங்கள்.வேர்க்காய்கறிகள் வளர்வதற்கு அதிகப்படியான ஈரப்பதம் தேவை. அதோடு நிறைய மாய்ஸ்ச்சரை தனக்குள் உறிஞ்சி எடுத்து வைத்துக் கொள்ளும். இந்த வகை காயகறிகளை சமைப்பதற்கு முன் நன்கு சுத்தம் செய்யாமல் போனால் அது நோய்த் தொற்றுக்களைப் பரப்பலாம்.




Tags

Next Story