தனியாவின் தனித்துவமான நன்மைகள்
தனியாவின் நன்மைகள்
கொத்தமல்லி விதையான தனியாவை பல வித உணவு வகைகளில் பயன்படுத்துகிறோம். உலர்ந்த மல்லி விதைகள் மசாலாப் பொருளாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. மல்லி விதைகள் மட்டுமல்லாமல், கொத்தமல்லி இலைகளும் உணவின் சுவையை அதிகரிக்கின்றன. மல்லி விதைகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கு அளவே இல்லை. தனியாவில் (Coriander Seeds) பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவை உள்ளன. மேலும் இதில் ஃபோலிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவையும் அதிக அளவில் உள்ளன.சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், கொத்தமல்லி விதை நீரை தொடர்ந்து குடிக்கலாம். இந்த நீர் இரத்த குளுக்கோஸைக் குறைத்து, இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது. இது வைரஸ் தொற்றுகளிலிருந்து உடலை காக்கின்றது.தனியா சளி மற்றும் காய்ச்சலுக்கு எதிராகவும் நம்மை பாதுகாக்கின்றது. கொத்தமல்லியில் பல அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன. கொத்தமல்லி விதைகளில் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகளும் உணவு நார்ச்சத்தும் உள்ளன. இது நமது கல்லீரல் மற்றும் குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.மல்லி விதைகள் முகப்பருவைக் குறைக்க உதவும்.தலைமுடிக்கு தடவும் எண்ணெயில் மல்லி தூளை கலந்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மசாஜ் செய்தால் முடி உதிர்தல் பிரச்சனை குறையும்.தனியா தோல் அழற்சி, அரிப்பு மற்றும் வெடிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.