வைட்டமின் பி12 குறைபாடுகளுக்கு தீர்வை தரும் சைவ உணவுகள் !!!

வைட்டமின் பி12 குறைபாடுகளுக்கு தீர்வை தரும் சைவ உணவுகள் !!!

வைட்டமின் பி12 குறைபாடு

வைட்டமின் பி12 குறைபாடு நரம்பியல் பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இரத்த சோகை, பலவீனம், சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும்.


வைட்டமின் பி 12 இறைச்சி, மீன் பொருட்களில் அதிகம் காணப்படுகிறது என்பதை மறுக்க இயலாது. இருப்பினும், சைவ உணவுகள் வைட்டமின் பி12 ஊட்டச்சத்தின் நல்ல ஆதாரங்களாக இருக்கின்றன.

சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் பி 12 இன் முக்கியமான ஆதாரமாக பால் மற்றும் அதலிருந்து பெறப்படும் தயிர், பாலாடைக்கட்டி மற்றும் நெய் போன்ற உணவுகள் உள்ளன. இது தினமும் ஒரு கிளாஸ் பசும் பால் குடிப்பதன் மூலம், உங்கள் தினசரி வைட்டமின் பி12 தேவையை பூர்த்தி செய்யலாம்.

ப்ரோக்கோலியில் வைட்டமின் பி12 மட்டுமல்லாது, ஃபோலிக் அமில சத்தும் காணப்படுகிறது. உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. இதனால், இரத்த சோகை ஏற்டாமல் தடுக்கலாம்.



சோயா பால், பாதாம் பால் மற்றும் ஓட்ஸ் பால் போன்ற தாவர அடிப்படையிலான பால் வகைகள், வைட்டமின் பி12 ஊட்டசத்தினால் செறிவூட்டப்பட்டவை. லாக்டோஸைத் தவிர்ப்பவர்களுக்கும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

சீஸ் போன்ற சுவை கொண்ட ஊட்டச்சத்து நிறைந்த ஈஸ்ட் சூப்பர்ஃபுட் சைவ உணவு. இதில் நல்ல அளவு வைட்டமின் பி12 உள்ளது.

சில வகையான காளான்கள், குறிப்பாக ஷிடேக் காளான்கள், ஓரளவு வைட்டமின் பி12 சத்து கொண்டவை.


ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வைட்டமின் பி12 ஊட்டச்சத்தின் இயல்பான அளவு 200 pg/mL முதல் 900 pg/mL என்ற அளவில் இருக்க வேண்டும். வயதானவர்களுக்கு 300 pg/mL முதல் 350 pg/mL வரை இருக்க வேண்டும்.

Tags

Next Story