ஆரோக்கியமாக வாழ தேவையான வைட்டமின்கள்!!!
வைட்டமின்கள்
ஒட்டுமொத்த ஆரோக்கியம் சிறப்பாக இருக்க சில வைட்டமின்கள் மிகவும் முக்கியம். வைட்டமின் சத்துக்களைப் பெற, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், உணவு மூலம் எடுத்துக் கொள்வதே மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. வைட்டமின் டி (Vitamin D): சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி, நமது நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிப்பதோடு மட்டுமின்றி, எலும்புகள் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. மன ஆரோக்கியத்திற்கும் இந்த வைட்டமின் மிகவும் தேவை. வைட்டமின் சி (Vitamin C): வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வதால், இதய நோய்கள், பல வகையான புற்று நோய்கள், மறதி நோய்கள் ஆகியவற்றை தவிர்க்கலாம்.. ஆரஞ்சு எலுமிச்சை போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள், ப்ரோக்கலி, குடைமிளகாய், கிவி, பெர்ரி பழங்கள் ஆகியவற்றில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ப்ரீ ரேடிக்கல்களால் செல்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது. வைட்டமின் ஈ (Vitamin E): ஆரோக்கியமான சருமம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித் தரும் வைட்டமின் ஈ, அல்சைமர் நோயை தடுக்கவும், முதுமை காரணமாக ஏற்படும் உடல் நல பாதிப்புகளை தடுக்கவும் பெரிதும் உதவுகிறது.ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் நிறைந்த வைட்டமின் ஈ உணவுகள், செல்கள் வீக்கம் அடைவதில் இருந்தும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்தும் பாதுகாக்கிறது. நட்ஸ், விதைகள், கீரை, முழு தானியங்கள் ஆகியவை வைட்டமின் ஈ சத்து நிறைந்த உணவுகள் ஆகும். வைட்டமின் பி12 (Vitamin B12): இறைச்சி, மீன் உணவுகள், பால் பொருட்கள் ஆகியவை வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள் ஆகும். சிவப்பு ரத்த அணுக்கள் உருவாகும், டிஎன்ஏ சென்டர்சிஸ், நியூரான் செயல்பாடுகளுக்கும் வைட்டமின் பி12 மிக அவசியம். வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை உண்பதால், ரத்த சோகை, இதய நோய்கள், முதுமையினால் ஏற்படும் மூளை பாதிப்புகள் போன்றவை தடுக்கப்படுகின்றன.. வைட்டமின் கே2 (Vitamin K2): முட்டையின் மஞ்சள் கரு, பாலாடை கட்டி, புளிக்க வைக்கப்பட்ட உணவுகள், புல் பொருட்கள் உண்ணும் விலங்குகளின் இறைச்சிகள் ஆகியவை வைட்டமின் கே2 நிறைந்த உணவுகள் ஆகும்.வைட்டமின் கே2, ஆரோக்கியமான ரத்த உறைதலுக்கு அவசியம். எலும்பு ஆரோக்கியம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் கே2, தமனிகள் மற்றும் திசுக்களில் கால்சியம் உருவாகாமல், அவற்றை எலும்புகள் மற்றும் பற்களை சென்றடைய உதவுகிறது.