நுரையீரலில் ஏற்படும் நோய்கள் என்ன? எவ்வாறு தடுக்கலாம்..!
நுரையீரல்
நுரையீரல் என்பது உயிரினங்கள் மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் முக்கிய உடல் உறுப்புக்களில் ஒன்றாகும். காற்றை உள்வாங்கி, வெளிவிட்டு உடலுக்கு உயிர் சக்தியைத் தரும் மோட்டார்தான் நுரையீரல். வாயு பரிமாற்றம் இவ்வுறுப்பின் முக்கிய பணியாகும். மொத்த நுரையீரலின் கொள்ளளவு சராசரியாக 6 லிட்டர்..மிகவும் இழுத்து மூச்சுவிடும் போது காற்றின் அளவு 5லிட்டர்..காற்றின் அளவு 1 லிட்டர்..நுரையீரல் தமனி மூலமாக வந்த கார்பன்-டை-ஆக்சைடு நிறைந்த இரத்தத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றி, புதிய ஆக்சிசனை ஏற்றுக்கொண்டு, நுரையீரல் சிறைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது.
பொதுவான நுரையீரல் நோய்கள்:
1.ஆஸ்துமா: வாழ்க்கை முறை மாற்றம், அதிகரித்து வரும் மாசுபாடு, புகைபிடித்தல், நகரமயமாக்கல் போன்ற காரணங்களால் இந்தியாவில் ஆஸ்துமா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
2.நிமோனியா:நிமோனியா நுரையீரல்களில் ஒன்று அல்லது இரண்டையும் பாதிக்கிறது மற்றும் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
3.காசநோய்: இது ஒரு தொற்று, காற்றில் பரவும் நோய்.
4.நுரையீரல் புற்றுநோய்: சந்தேகத்திற்கு இடமின்றி நுரையீரல் நோய்களில் மிகவும் ஆபத்தானது..நுரையீரல் பாதிப்பிற்கான அறிகுறிகள் : இருமல், சளி, மூச்சு திணறல், நெஞ்சு வலி, இருமலுடன் ரத்தம் வருதல், இளைப்பு ..
நுரையீரல் நோய் வாரமல் தடுக்க சில வழிமுறைகள்:
யோகா மற்றும் சுவாசப் பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் தடுக்கலாம்.. புகைபிடிப்பதைத் தவிர்ப்பதன் மூலம் தடுக்கலாம்.. குப்பைகளைத் தவிர்ப்பதன் மூலம் தடுக்கலாம்.. நுரையீரலை சுத்திகரிக்கும் உணவுகள்!...ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் : நுரையீரல் செயல்பாட்டைச் சீராக்க உதவும். நுரையீரலில் ஏற்படும் வீக்கங்கள் போன்றவற்றைக் குறைப்பதற்கு உதவும். கார்டீனாய்ட்ஸ்: ஆன்டிஆக்ஸிடன்ட்தான். நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கக்கூடியது..பூண்டு: உணவில் அவ்வப்போது சிறிது பூண்டைச் சேர்த்துவர, நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்..வைட்டமின் சி : நுரையீரலின் சீரான இயக்கத்துக்கு உதவும்.