சியா விதையுடன் நெல்லிக்காய் ஜூஸ் பருகினால் என்னென்ன நன்மைகள் பாக்கலாமா ?
நெல்லிக்காய் ஜூஸ்
தினசரி காலை ஒரு கப் அளவு நெல்லிக்காய் ஜூஸுடன் ஊற வைத்த சியா விதைகள் சேர்த்து உட்கொள்வதன் நன்மை - தீமை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்து காணப்படும் நெல்லிக்காய் ஜூஸின் நுகர்வு ஆனது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், சீரான செரிமான செயல்பாட்டை உறுதி செய்து ஆரோக்கிய வாழ்வுக்கு வழி வகுக்கிறது.
உடல் எடையிழப்பில் கவனம் செலுத்துபவர்களுக்கு ஆம்லா சியா விதை நீர் உணவில் மதிப்புமிக்க பகுதியாக அமைகிறது. பொதுவாக சியா விதைகளை ஊறவைக்கும் போது தண்ணீரை உறிஞ்சி ஜெல் போன்ற அமைப்பை உருவாக்குகிறது. இது முழுமை உணர்வை அளித்து வயிற்றில் வீங்கி, கலோரி நுகர்வு குறைக்க உதவுகிறது. மேலும், இது கொழுப்பு எரிவதைத் தூண்டுவதன் மூலமும், பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையிழப்பை ஆதரிக்கிறது. அன்றாட வழக்கத்தில் இந்த பானத்தைச் சேர்ப்பது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும், பயனுள்ள எடை நிர்வாகத்தையும் வளர்க்க உதவுகிறது.
ஆம்லாவை ஒரு சூப்பர்ஃபுட் என்றே கூறலாம். முதன்மையாக ஆம்லாவில் உள்ள வைட்டமின் சி உள்ளடக்கம், ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு உதவுகிறது. ஆம்லா சியா விதை நீரைத் தொடர்ந்து குடிப்பதால், உடலின் தொற்று மற்றும் நோய்களைத் தடுக்கும் திறனை மேம்படுத்தலாம். ஆம்லாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைக்கவும், நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவுகிறது.
மேலும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கு சியா விதைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பானம் குளிர் மற்றும் காய்ச்சல் காலங்களில் உடலை பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு ஒரு சிறந்த வழியாகும்.வைட்டமின் சி-ன் சிறந்த ஆதாரமாக இருக்கும் இந்த சியா விதை - நெல்லிக்காய் ஜூஸ் கலவை ஆனது, வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை கட்டமைக்கிறது. அந்த வகையில் இது ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகை செய்கிறது.
நெல்லிக்காய் மற்றும் சியா விதையில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் காணப்படும் கரும்புள்ளி, நிறமி பிரச்சனைகளை எதிர்த்து போராடுகிறது. மேலும், வயது மூப்பு அறிகுறிகளையும் தவிர்த்து இளமை தோற்றம் பெற உதவுகிறது. ஆம்லா சியா விதை நீரின் மற்றொரு ஈர்க்கக்கூடிய நன்மைகளில் ஒன்று சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
வெறும் வயிற்றில் இந்த நெல்லிக்காய் ஜூஸ், சியா விதை கலவையை உட்கொள்வது உங்கள் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்கிறது. மேலும், நாள் முழுவதற்குமான ஆற்றலை அளித்து, உடல் சோர்வு உண்டாவதன் வாய்ப்பை குறைக்கிறது.
ஊற வைத்த சியா விதைகளின் நுகர்வு ஆனது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. அந்த வகையில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து நீரிழிவு நோயாளிகளின் நலன் பாதுகாக்கிறது.
கோப்பை ஒன்றில் சியா விதையுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து 4 - 5 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். இதனிடையே நெல்லிக்காயை விதை நீக்கி சுத்தம் செய்து சாறு பிரித்து எடுக்கவும். பின், இரண்டையும் ஒன்றாக கலந்து விட்டால் ஜூஸ் ரெடி.
தனி நபரின் உடல் நிலை மற்றும் ஆரோக்கிய நிலை பொறுத்து இந்த நெல்லிக்காய் - சியா விதை நுகர்வின் பலன் மாறுபடலாம். எனவே, இந்த ஜூஸை பருகும் முன், மருத்துவர் பரிந்துரை பெறுவது நல்லது.