வயிற்று புண் (அல்சர் ) எதனால் வருகிறது ? அதை இயற்கையாக சரிசெய்யும் வழிமுறைகள் !!!

வயிற்று புண் (அல்சர் ) எதனால் வருகிறது ? அதை இயற்கையாக சரிசெய்யும் வழிமுறைகள் !!!

வயிற்று புண்

பொதுவாக உணவு சுடச்சுட அருந்துவது காரணம். இரவு வெகு நேரம் கழித்து உண்டவுடன் உறங்க செல்வது செரியாமை ஆகிய காரணங்களால் வயிற்று புண் உண்டாகிறது.

வயிற்றுப்புண் குணமாக அல்லது வராமல் தடுக்க, காரங்களை தவிர்க்க வேண்டும் ,சமைத்த உணவு உண்பதாயின் ஓரளவு ஆரியதையே உண்ண வேண்டும். காரம் வேண்டி மிளகு பயன்படுத்தலாம்.

இரவு உணவை 7 மணிக்குள் முடித்து விட வேண்டும் இரவு உணவு இயற்கை உணவாக கனிகள் நிறைந்த உணவாக இருக்க வேண்டும், செரிமானம் ஆகும் உணவில் கனி வகைகள், பச்சை காய்கறிகள் உண்டான இயற்கை உணவு அதிகம் இருக்க வேண்டும்.

வயிற்றுப்புண் எளிதில் விரைவில் குணமாக மாத்திரை மருந்துகளை பயன்படுத்தாமல் வெண்பூசணி சாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் பல் துலக்கியவுடன் அருந்த வேண்டும், மணத்தக்காளி இலைச்சாறும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தலாம். உணவு வேலைகளுக்கு இடையில் அவ்வப்போது தேன் கலந்து தண்ணீர் அருந்தலாம். மேலும் அருகம்புல் சாறு வல்லாரை இலை சாறு, நெல்லிக்காய் சாறு, வில்வா இலை சாறு ஆகியனவும் வெறும் வயிற்றில் அருந்தி வரலாம்.

வாழைப்பழம், திராட்சை பழம், வில்வ பழம், பப்பாளி பழம், ஆரஞ்சு பழம், அண்ணாச்சி பழம், வெள்ளரி பழம் ஆகிய கனிகள் அதிகம் உண்டு வரலாம். தேன் இரண்டு தேக்கரண்டி தயிர் இரண்டு தேக்கரண்டி தேங்காய் பால் இரு தேக்கரண்டி ஆகிய மூன்றையும் கலந்து காலையையும் மாலையிலும் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். வாழைப்பூவும் வயிற்றுப் புண்ணை ஆற்றும்

Tags

Next Story