மன உளைச்சல் என்றால் என்ன ?? மன உளைச்சல் அறிகுறிகள் !!
மன உளைச்சல்
மன உளைச்சல் :
மன உளைச்சல் உணர்ச்சித்துன்பம் என்று மருத்துவ மொழியில் அழைக்கப்படுகிறது. எதிர்மறையான சங்கடமான அல்லது துன்பகரமான உணர்ச்சிகள் அன்றாட வாழ்க்கை தரத்தை சீர்குலைக்கும் அளவுக்கு மோசமான உணர்வுகளை உண்டு செய்யலாம். இந்நிலையில் சோகம், கவலை, விரக்தி, வேதனை போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் வாழ்க்கையின் அழுத்தங்களுக்கு எதிர்வினைகளை உண்டு செய்யும். இவை ஒரே நேரத்தில் அதிகமாக பாதிக்கும் போது அதை நிர்வகிப்பது கடினமாக இருக்கலாம்.
அறிகுறிகள் :
அதிகமாக அல்லது குறைவாக சாப்பிடுவது, அதிகமாக அல்லது குறைவாக தூங்குவது, எப்போதும் கோபமாக இருப்பது, எரிச்சலுடன் இருப்பது, பிறரை தாழ்த்தி வசைபாடுவது, சோகத்துடன் இருப்பது, தனிமையாக இருக்க விரும்புவது, மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள பிடிக்காமல் தனித்திருப்பது, எப்போதும் சோர்வாக இருப்பது, பிஸியாக இருக்க வேண்டும் என்னும் உணர்வு, வயிறு வலி அல்லது தொடர்ந்து தலைவலி என விவரிக்க முடியாத வலிகள், உதவியற்ற அல்லது நம்பிக்கையற்ற உணர்வு, புகைப்பழக்கம், மது அருந்துதல், எப்போதும் கவலையுடன் இருப்பது, தவறு செய்யாமல் குற்ற உணர்வுடன் இருப்பது, அன்றாட வாழ்க்கையை மாற்றுவதில் சிரமம் இந்த மாதிரியான அறிகுறிகள் தோன்றும்.