மகாராஷ்டிரா துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்றார்!!

மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் சமீபத்தில் பராமதியில் நடந்த விமான விபத்தில் காலமானார். இதனைத் தொடர்ந்து, காலியாக உள்ள துணை முதல்வர் பதவிக்கு அவரது மனைவியும், மாநிலங்களவை உறுப்பினருமான (MP) சுனேத்ரா பவார் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தேசியவாத காங்கிரஸ் (NCP) கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இன்று மாலை 5 மணிக்கு அவர் துணை முதல்வராகப் பதவியேற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மராட்டிய துணை முதல்வராக பதவி ஏற்ற முதல் பெண் என்ற பெருமையை சுனேத்ரா பவார் பெற்றுள்ளார். முன்னதாக, துணை முதல் மந்திரி பதவி ஏற்பதற்காக அவர் இன்று காலை மும்பை சென்றடைந்தார். அவருடன் அவரது மகன் பரத் வந்தார். தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுனேத்ரா பவார் சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படார். 62 வயதான சுனேத்ரா பவார் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாராமதி தொகுதியில் சுப்ரியா சுலேவிடம் தோற்றார். இதனைத் தொடர்ந்து அவர் மேல்சபை எம்.பி. ஆனார். தற்போது துணை முதல்வராகிறார். பாராமதி பகுதியை உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்காவாக மாற்றியதில் சுனேத்ராவுக்கு பங்கு உண்டு. சுனேத்ரா பவார் துணை முதல்வராக ஆவதால், அவரது மேல்சபை எம்.பி. பதவியை அவரது மகன் பரத் பெறுகிறார்.
