சிப் பொருத்தப்பட்ட E-Passport அறிமுகம்!

X
passport
இந்தியாவில் பயோமெட்ரிக் விபரங்கள் அடங்கிய E-Passport பயன்பாட்டை அமலுக்கு கொண்டுவந்தது வெளியுறவுத்துறை. E-Passport-ன் கடைசி பக்கத்தில் RFID சிப், ஆன்டெனா பொருத்தப்பட்டு தனிபட்ட தரவுகள், கை ரேகை, முக தரவு ஆகியவை டிஜிட்டல் என்கிரிப்ஷன் முறையில் பதிவுசெய்யப்படும். இதனால் விபரங்களை திருடவோ, மாற்றவோ முடியாது. இதனால் போலி பாஸ்போர்ட் மோசடிகள் தடுக்கப்படும், விமான நிலையங்களில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு நேரம், மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
