பரீட்சையை நிறுத்த 23 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 12 ஆம் வகுப்பு மாணவன் கைது!!

பரீட்சையை நிறுத்த 23 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 12 ஆம் வகுப்பு மாணவன் கைது!!

கைது

டெல்லியில் உள்ள 23 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக 12 ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

டெல்லியில் உள்ள 23 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக 12 ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லியின் பல்வேறு பள்ளிகளுக்கு ஈமெயில் மூலம் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதுபற்றி விசாரணை நடத்தி வந்த போலீசார், அந்த மாணவனை கண்டறிந்தனர். தேர்வுகளை நிறுத்துவதற்காக அந்த மாணவன் இவ்வாறு செய்துவந்துள்ளான். யாருக்கும் சந்தேகம் வராமல் ஒவ்வொரு முறையும் தனது பள்ளியை தவிர்த்து மற்ற பள்ளிகளின் பெயரை குறிப்பிட்டு வளாகத்தில் ஆபத்தான வெடிபொருட்கள் இருப்பதாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளான். போலீசாரும் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு சென்று ஏமாற்றம் அடைத்துள்ளனர். இதுபோல 6 முறை 23 பள்ளிகளுக்கு அம்மாணவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். கடந்த புதன்கிழமையும், வசந்த் விஹாரில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி மற்றும் ஆர்கே புரம், ப்ளூ பெல்ஸ் மற்றும் தாகூர் இன்டர்நேஷனல் உள்ளிட்ட பள்ளிகளுக்கு மாணவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து சைபர் காவல்துறை அவனை கண்டுபிடித்துள்ளது. அந்த மாணவனை தற்போது கைது செய்துள்ளாதாக தெற்கு டெல்லி டிசிபி அங்கித் சவுகான் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story