ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்!
பொதுத்தேர்வு!
விரைவில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்தது.
தேர்வு குறித்த மாணவர்களின் பதட்டத்தை தணிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டிற்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் 2025-26ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்காகவும் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.