53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது !

53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது !

 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது.

நடப்பு நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் எதிர்பார்ப்புகள் மற்றும் அதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக இன்று அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்திலிருந்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் உள்ளிடோர் இந்த கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.

பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைப்பது அல்லது மாற்றி அமைப்பது குறித்து மாநில நிதி அமைச்சர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story