டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கம்!!
டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சமீப காலமாக டிஜிட்டல் மோசடிகள் அரங்கேறி வருகிறது. இதைத்தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் முடக்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் பாண்டி சஞ்சய்குமார் மக்களவையில் பேசுகையில், டிஜிட்டல் கைது மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 1,700 ஸ்கைப் ஐ.டி.கள் மற்றும் 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. இதுவரை 9.94 லட்சத்திற்கும் அதிகமான புகார்களில் ரூ. 3,431 கோடி மீட்கப்பட்டுள்ளது. 6.69 லட்சத்திற்கும் அதிகமான சிம்கார்டுகள், 1.32 லட்சம் ஐ.எம்.இ.ஐ.கள் முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Next Story