அருணாச்சலப் பிரதேசத்தின் அபார வெற்றி! சூழ்ச்சியில் புதைந்த காங்கிரஸ்.. பின்னணி என்ன ?

அருணாச்சலப் பிரதேசத்தின் அபார வெற்றி! சூழ்ச்சியில் புதைந்த காங்கிரஸ்.. பின்னணி என்ன ?

பீமா காண்டு

நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை துவங்கப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.

சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் இமாலய மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அருணாசல பிரதேசத்தில். சிக்கிமில் ஆளும் கட்சி அபார வெற்றி பெற்றது.

அருணாச்சல பிரதேசத்தில் 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே, மொத்தமுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் 50 இடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக 46 இடங்களில் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சியான கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது. கடந்தமுறை 41 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றது.

காங்கிரஸ் கோட்டையாக இருந்த அருணாச்சல பிரதேசம் அதன் பிறகு பாஜக கைவசம் மாறியது எப்படி?

மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அங்கிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வர் பீமா காண்டு தலைமையில் 43 எம்எல்ஏக்கள் அப்படியே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அருணாச்சல மக்கள் பிரதேச கட்சியில் அதாவது பாஜக கூட்டணி கட்சியில் இணைந்தனர். அதாவது காங்கிரஸ் கட்சியில் தூபம் நகி என்ற ஒரு எம்எல்ஏ தவிர ஒரு மாநிலத்தில் இருந்த முதல்வர் முதல் எல்லாருமே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினர். அன்று அழிந்த காங்கிரஸ், அதற்கு பிறகு அதில் இருந்து மீளவே இல்லை. அதேநேரம் முதல்வர் பீமா காண்டு தலைமையில் 33 எம்எல்ஏக்கள் சரியாக, அதே 2016ம் ஆண்டு டிசம்பரில் பாஜகவில் இணைந்தனர். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து அருணாச்சல மக்கள் பிரதேச கட்சியும் பாஜகவால் அழிந்தது. அப்போது போல் பீமா காண்டு தான் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார்.

தற்போது சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னனியில் கடைசி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களுடன் பாஜக பேரம் பேசி வேட்புமனுவை திரும்ப பெற வைத்ததாக சூழ்ச்சி இருப்பதாக தெரிகிறது.

கடந்த முறை அருணாச்சலப் பிரதேசத்தின் சட்டமன்ற தேர்தலில் வேலை இடங்களை பற்றிய பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இம்முறை அருணாச்சல பிரதேசத்தில் போட்டியிடாததும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story