வானிலை குறித்த துல்லிய ஆய்வை எந்த வானிலை ஆய்வு கருவிகளை கொண்டும் கணிக்க முடியாது .. - பாலச்சந்தர்
பாலச்சந்தர்
வானிலை பலவிதமான காரணிகளை கொண்டிருப்பதால் துல்லியமாக கணிக்க இயலாது, இன்றைய சூழலில் புயல், கனமழை போன்றவற்றை கணிப்பது குறித்து முழுமையான அறிவியல் இல்லை எனவும் செயற்கைக்கோள், கணினி மாதிரிகளை வைத்தே வானிலை நிலவரங்களை கூறுகிறோம், புயலுக்குள் ஆய்வு விமானங்களை செலுத்தி விவரங்களை பெற்றுக் கூட வானிலை கணிப்பானது செய்யப்படுகிறது. ஆனால் அதுவும் சில நேரங்களில் தவறாகி விடுகிறது, தொழில்நுட்பத்தை வைத்து மட்டுமே வானிலையை துல்லியமாக கணிக்க முடியாது, தொழில்நுட்பத்துடன் அறிவியலும் மேம்பட வேண்டும் ! என வானிலை ஆய்வு மண்டல தலைவர் பாலச்சந்தர் தகவல் ..மேலும் வானிலை குறித்த துல்லிய ஆய்வை எந்த வானிலை ஆய்வு கருவிகளை கொண்டும் கணிக்க முடியாது ..
Next Story