அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து.. மஹுவா மொய்த்ரா!

அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து.. மஹுவா மொய்த்ரா!

மஹுவா மொய்த்ரா

திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ தற்போது ரெய்டு நடத்தி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ரா மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பாஜகவுக்கு எதிராக கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக மொய்த்ரா மீது பாஜக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பாஜக எம்பி கொடுத்த புகாரின் அடிப்படையில், மொய்த்ரா எம்பி பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனிடையே நேற்று முன்தினம்தான் டெல்லி முதல்வரும், இந்தியா கூட்டணி தலைவர்களில் ஒருவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மொய்த்ரா தொடர்புடைய இடங்களில் சிபிஐ நடத்த தொடங்கியிருக்கிறது.



Tags

Next Story