கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்பி அரசியலில் இருந்து விலகல்!
கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்பி அரசியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக பாஜக எம்.பி.,யும் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர், அரசியல் தொடர்பான பணிகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் வலியுறுத்தியிருந்தார்.
கடந்த ஆண்டு ஐபிஎல்லில் கவுதம் கம்பீர் கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அந்தப் பணியில் கவனம் செலுத்துவதற்காக தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநில மக்களவை எம்பி ஜயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலகி, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவாதில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Next Story