பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் அமித்ஷா அளித்த பதில் !!!

பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் அமித்ஷா அளித்த பதில் !!!

அமித்ஷா

கர்நாடகாவை உலுக்கும் அளவிற்கு நடந்த 3000 ஆபாச வீடியோக்களில் முக்கியமாக 300க்கும் மேற்பட்ட பெண்களை நாசமாக்கிய பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா மீது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் பிரதமரான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீது பெண்களை நாசமாக்கியதாக புகார் எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய மூவாயிரம் ஆபாச வீடியோக்கள் கர்நாடக மாநிலத்தில் அரசின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது பிரஜ்வல் ரேவண்ணா இந்தியாவை விட்டு தப்பி ஓடி விட்டார். அதே நேரத்தில் பாஜக தலைவர் இதைப் பற்றி பேச முடியாது எனக் கூறினார்.

ஜேடிஎஸ் கட்சியோ பிரஜ்வல் ரேவண்ணா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றிய ஆலோசிக்கிறோம் என்றது. பிரஜ்வல் ரேவண்ணா ஓட விட்டது மோடி தான் மோடியும் அமித்ஷாவும் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்தார்.

பெண்கள் சக்தி பாதுகாக்கப்பட வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு என்றார். கர்நாடகாவில் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருக்கிறது இப்போது வரை இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன் என்று கேட்டார். இது ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனை இந்த சட்ட ஒழுங்கு பிரச்சனை அரசுக்கு உரியது. ஆகையால் மாநில அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அரசு நடத்துகின்ற விசாரணையை பாஜக வரவேற்கிறது. எங்களுடைய கூட்டணி கட்சியான ஜே டி எஸ் பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுப்பது குறித்த ஆலோசிக்கிறது. ஜேடிஎஸ் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதுதான் எங்கள் நிலைப்பாடு என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story