ஆந்திர ரயில் விபத்து - 6 பேர் உயிரிழப்பு
தடம் புரண்ட ரயில் பெட்டிகள்

ஆந்திர மாநிலம் கண்டகபள்ளி அருகே 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்
விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடாவிற்கு சென்று கொண்டிருந்த விசாகா- ராயகாடா பயணிகள் ரயில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகப்பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது பலசாவில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி மற்றொரு ரயில் வந்தது. இந்த ரயில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் மீது மோதியதில் 3 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
Next Story



