பாஜகவுக்கு செக்! பிரதமர் அமித்ஷா தான்! அர்விந்த் கெஜ்ரிவால் அடுத்தடுத்து தாக்கு!
அர்விந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்திய அர்விந்த் கெஜ்ரிவால் அப்போது, ''ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க நினைத்து பாஜகவினர் என்னை சிறைக்கு அனுப்பிவிட்டனர். ஆனால் பாஜகவின் எண்ணம் தோல்வியடைந்துவிட்டது. எனது கைதால் கட்சி மேலும் வலுவடைந்துள்ளது. ஆம் ஆத்மி ஒரு கட்சி மட்டுமல்ல 'ஒரு குடும்பம்'. அதை யாரும் உடைக்க முடியாது.'' என கூறினார்.
இன்னும் 21 நாட்களில் எங்கு முடியுமோ, அங்கெல்லாம் சென்று, பா.ஜ.க.வை தோற்கடிக்க பிரசாரம் செய்வேன். ஜூன் 2 ஆம் தேதி, மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும். ஆனால், ஜூன் 4 ஆம் தேதி இந்திய கூட்டணிஅரசாங்கத்தை மக்கள் அமைத்தால், நான் ஜூன் 5 ஆம் தேதி வெளியே வருவேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
முன்னதாக டெல்லியிலுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் பேசிய அர்விந்த் கெஜ்ரிவால், இந்தியா கூட்டணியைப் பார்த்து ''உங்களுடைய பிரதமர் வேட்பாளர் யார்?" என்று கேட்கிறார்கள். பா.ஜ.க-வைப் பார்த்து நான் கேட்கிறேன்... "உங்களுடைய பிரதமர் யார்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “பா.ஜ.க-வில் 75 வயததை அடைந்தவர்களுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் எந்தப் பதவியும் கிடையாது என்ற விதியை பா.ஜ.க வகுத்துவைத்திருக்கிறது. மோடிக்கு அடுத்த செப்டம்பர் மாதம் 17-ம் தேதி 75 வயது ஆகப் போகிறது. எனவே, மோடி தனக்காக வாக்கு கேட்கவில்லை. அமித்ஷாவை பிரதமராக ஆக்குவதற்காகவே மோடி வாக்கு கேட்கிறார்.'' என்றார் கெஜ்ரிவால்.