உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனிகா!
கொரோனா தடுப்பூசி
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவித்துள்ளது. கோவில்ஷீல்டு தடுப்பூசியால் உயிரிழப்பு ஏற்படுவதாக அதன் கண்டுபிடிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனிகாவுக்கு எதிராக இங்கிலாந்தில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.
இது தொடர்பாக அந்நிறுவனம் ‘கோவிட் தடுப்பூசியான கோவிஷீல்டு ரத்தத்தில் உறைதல் ஏற்படலாம், இரத்த பிலேட்லெட்டுகள் குறையலாம் இது எல்லோருக்கும் வருவதில்லை, மிக அரிதாக நடக்கலாம்’ என நீதிமன்றத்தில் விளக்கமளித்தது.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவித்துள்ளது.
Next Story