24 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த பாஜக! நவீன் பட்நாயக் ராஜினாமா!

24 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த பாஜக! நவீன் பட்நாயக் ராஜினாமா!

நவீன்பட்நாயக்

ஒடிசா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக். ஆளுநர் ரகுபர் தாஸை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து சட்டப்பேரவைக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) ஆகிய கட்சிகளுக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவியது.

ஒடிசா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 51 இடங்களை மட்டுமே பெற்று பிஜு ஜனதா தளம் கட்சி தோல்வியை தழுவியது. `ஒடிசாவை தமிழர் ஆள விடக்கூடாது' என்று வலியுறுத்திய பாஜக நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை முதல்வராக இருந்து வந்த நவீன் பட்நாயக்கின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன்பட்நாயக்.

Tags

Next Story