ஹரியானாவில் ஆட்சியை இழக்க போகிறதா பாஜக!
ஹரியானா ஆட்சி
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸை வீழ்த்தி பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஹரியானா முதல்வராக மனோகர் லால் கட்டார் பதவியேற்றார். துணை முதல்வராக ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகப் பதவியேற்றார்.
இந்நிலையில், பா.ஜ.க ஆதரவு தெரிவித்து வந்த சுயேட்சை வேட்பாளர்கள் மூன்று பேர் ஆதரவை திரும்ப பெற்று வாபஸ் பெற்றனர்.
இதனால், ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், பா.ஜ.க அரசு கவிழும் சூழ்நிலையில் இருக்கிறது.
இதனிடையே நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி JJP கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா ஹரியானா ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தவறும்பட்சத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனவும் துஷ்யந்த் சவுதாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சூழலில், மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்க நேரம் கேட்டு ஆளுநருக்கு அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேட்சை வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதால், சட்டமன்றத்தில் பாஜக பெரும்பான்மையை இழந்துள்ளது.