2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு!
பாஜக தேர்தல் வாக்குறுதி
- நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்
- ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும்
- நாடு முழுவதும் பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும்
- 2036-ம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை
- 2025-ம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்
- முத்ரா கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்
- இலவச ரேஷன் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும்
- இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என நான்கு திசைகளிலும் புல்லட் ரயில் சேவை
- படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்
- குறைந்த விலையில் பைப் மூலமாக கேஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
- அனைத்து நாடுகளிலும் ராமரின் பாரம்பரியத்தை கொண்டுசெல்ல உலகளாவிய திட்டம் செயல்படுத்தப்படும்
- வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து அமைதிப் பேணப்படும்
- வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையேயான இடையேயான எல்லைப் பிரச்சனைகளைத் தீர்க்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
- வடகிழக்கில் உள்ள பதட்டமான பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரங்கள் சட்டம், படிப்படியாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்
Next Story