நிபா வைரஸால் சிறுவன் பலி - சுகாதாரத்துறை எச்சரிக்கை !!

நிபா வைரஸால் சிறுவன் பலி - சுகாதாரத்துறை எச்சரிக்கை !!

நிபா வைரஸ்

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்த நிலையில் நிபா வைரசால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு அருகே உள்ள செம்பரசேரி பகுதியை சேர்ந்த அந்த சிறுவனுக்கு முதலில் காய்ச்சல் பாதித்தது. கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுவனிடமிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், அந்தச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அவர்களின் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நிகழ்வு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சினை, மனநலப் பிரச்சினை போன்றவை நிபா வைரஸின் முக்கிய அறிகுறிகளாகும்.

அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் அவரது தொடர்பில் இருப்பவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். இந்நிலையில் மலப்புரத்தை சேர்நத 68 வயது முதியவர் ஒருவருக்கும் நிபா வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டன.

அந்த முதியவர் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். நிபா வைரஸ் பரவலை முன்னிட்டு மலப்புரம் மாவட்டம் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் சுகாதாரப்பணிகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், யாரும் பயப்பட தேவையில்லை. தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களை போலீசார் உதவியுடன் தேடி வருகிறோம் என்றார்.இதனிடையே, கோழிக்கோட்டில் நிபா வைரசால் பாதிக்கப்பட்ட 3 பேர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Tags

Next Story