இடைக்கால பட்ஜெட் : ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு ?

இடைக்கால பட்ஜெட் : ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு ?

இடைக்கால பட்ஜெட் : ஒரு ரூபாயில் 

இடைக்கால பட்ஜெட் : ஒரு ரூபாயில் வரவிற்கான என்னென்ன பங்குகள் உள்ளன என்பதையும், செலவிற்கான பங்குகள் என்னென்ன என்பதைப் பற்றியும் காண்போம்.

மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின்போது ஒரு ரூபாயில் வரவு எவ்வளவு செலவு எவ்வளவு என்பதை தெரிவித்து இருக்கிறார். ஒரு ரூபாயில் வரவிற்கான என்னென்ன பங்குகள் உள்ளன என்பதையும், செலவிற்கான பங்குகள் என்னென்ன என்பதைப் பற்றியும் காண்போம்.

அரசினுடைய வரவு ஒரு ரூபாயில்

வருமான வரி 19 பைசா, கலால் வரி 5 பைசா, நிறுவன வரி 17 பைசா, சரக்கு மற்றும் சேவை வரி 18 பைசா, சுங்கவரி 4 பைசா, கடை அல்லாத மூலதன ரசீது 1 பைசா, வரியில்லாத வருவாய் ரசீது 7 பைசா, கடன் உள்ளிட்ட வருவாய் 28 பைசா என வருமானங்கள் ஈட்டப்படுகிறது.

அரசினுடைய செலவு ஒரு ரூபாயில்

அதேபோல் செலவினத்திலும் ஓய்வூதியம் 4 பைசா, மாநில வரி பங்கீடு 20 பைசா, நிதி குழு செலவினங்கள் 8 பைசா, மத்திய துறை திட்டங்கள் 16 பைசா, பாதுகாப்பு துறை 8 பைசா, மானியங்கள் 6 பைசா, மத்திய அரசு ஆதரவு திட்டங்கள் 8 பைசா, கடன் வட்டி 20 பைசா, மற்ற செலவினங்கள் 9 பைசா என வருவாயிலிருந்து செலவிடப்படுகிறது.

Tags

Next Story