"நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்" - ராகுல் காந்தி விமர்சனம்

நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட் - ராகுல் காந்தி விமர்சனம்

ராகுல் காந்தி

பிற மாநில மக்களின் நலன்களை சமரசம் செய்து கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி வழங்குவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்திருக்கிறது மத்திய பட்ஜெட் எனவும் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

மேலும் மத்திய பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட். கூட்டணி கட்சிகளை தாஜா செய்தும், மற்ற மாநிலங்களை வஞ்சித்துள்ளது'

``அம்பானி மற்றும் அதானிக்கு பயனளிக்கும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது''

"பெரு முதலாளிகளை குஷிப்படுத்தியும், சாமானிய மக்களுக்கு எத்தகைய நிவாரணமும் வழங்காத பட்ஜெட்"

``காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டை காப்பி பேஸ்ட் செய்யும், பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

Tags

Next Story