தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானர்; அவருக்கு வயது 86!!

தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானர்; அவருக்கு வயது 86!!

ratan tata

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல்நலக்குறைவால் நேற்று (அக்.09) இரவு காலமானார்.

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, வயது மூப்பு, ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில், டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ரத்தன் டாடாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில், ரத்தன் டாடா உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (அக்.09) இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். கடந்த 1991 மார்ச்சில் டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்ற ரத்தன் டாடா, 2012 டிச., 28ல் ஓய்வு பெற்றார். அவரது பதவிக்காலத்தில், டாடா குழுமத்தின் வருவாய் பன்மடங்கு அதிகரித்தது. 1991ல் வெறும் 10,000 கோடி ரூபாய் இருந்த விற்றுமுதல், 2011- - 12ல், 100.09 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது. மேலும், ரத்தன் டாடா பொறுப்பில் இருந்தபோது, டெட்லி, கோரஸ், ஜாகுவார் லேண்ட்ரோவர் போன்ற நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டன.

Tags

Next Story