சிஏஏ சட்டமும் ! கிளம்பும் எதிர்ப்புகளும் !

சிஏஏ சட்டமும் ! கிளம்பும் எதிர்ப்புகளும் !

சிஏஏ 

சிஏஏ சட்டத்தை எதிர்த்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருக்ன்றனர்.

நாடு முழுவதும் நான்கு ஆண்டுகளுக்குப் பின் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள சீக்கியர்கள், ஜெயின், பாரசீகம், இந்து உள்ளிட்ட மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் மத துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு இந்தியா வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழி செய்கிறது இந்த சிஏஏ சட்டம்.

இந்த குடியுரிமை சட்டம் பாஜகவின் பிரிவினைவாத அரசியலை வெளிக்காட்டுவதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் இலங்கை தமிழரை வஞ்சிக்கும் சி ஏ ஏ சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆதாயத்திற்காக மத்திய பாஜக அரசு சிஏஏ சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் விமர்சனம் செய்துள்ளார்.

சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்த சட்டமும் இயக்கத்தக்கது அல்ல. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தமிழக ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும் என்று தவெக கட்சித் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

குடியுரிமை சட்ட விவகாரத்தில் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் பிரதமர் மோடி என எதிர் கட்சிகளின் கருத்திற்கு மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story