சிஏஏ சட்டம்: எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் - அமித்ஷா குற்றச்சாட்டு!

சிஏஏ சட்டம்: எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் - அமித்ஷா குற்றச்சாட்டு!

அமித்ஷா 

வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நாட்டின் குடியுரிமை திருத்த சட்டம் மத்திய அரசால் நேற்று முன்தினம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கருத்துகளும் வெளியாகி வருகின்றன. இந்த சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், கேரளா முதலமைச்சர், பினராயி விஜயன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பல்வேறு எதிர்க்கட்சிகளும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதற்கு பதில் அளித்துள்ளார்.

அகண்ட பாரதத்தில் ஒரு அங்கமாக இருந்தவர்கள் மத துன்புறுத்தலுக்கு ஆளாகப்பட்டவர்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்க வேண்டியது நமது தார்மீக அரசியல் சாசன கடமை.

குடியுரிமை திருத்த சட்டம் என்பது முற்றிலும் மத்திய அரசின் வரம்பிற்கு உட்பட்டது எனவும் குடியுரிமை சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது என்றும் தெரிவித்தார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குடியுரிமை திருத்த சட்டம் அமலாவது உறுதி.

மேலும் எதிர்க்கட்சியினர் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் என்பது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது எனவும் ஹிந்து மற்றும் கிறிஸ்துவ அகதிகளுக்கு குடியுரிமை அளிப்பதற்காக மட்டுமே இந்த குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் வேறு யாருடைய குடியுரிமை இந்த சட்டம் பறிக்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களுக்கும் கூட குடியுரிமை கூறி விண்ணப்பிப்பதற்கான உரிமை உள்ளது. யாருக்கும் கதவுகள் மூடப்படவில்லை என்றும் குடியுரிமை கூறி விண்ணப்பிப்பதற்கு எந்த விதமான கால நிர்ணயமும் இல்லை போதிய அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story