டெல்லி திகார் ஜெயிலில் காவலில் உள்ள கே.கவிதாவை சிபிஐ கைது செய்தது!
கே.கவிதா
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள சந்திரசேகர் ராவ் மகள் கவிதாவை சிபிஐ அமைப்பும் கைது செய்துள்ளது.
கவிதாவின் நீதிமன்ற காவல் இன்று (ஏப்.9) நிறைவடைந்த நிலையில், கவிதாவின் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க அமலாக்கத் துறை கோரியது. இதனை ஏற்ற நீதிமன்றம் காவலை ஏப்ரல் 23-ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, வழக்கமான ஜாமீன் கோரி கவிதா மனு தாக்கல் செய்தார். இந்த மனு வரும் 16-ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.
Next Story