ஃபெஞ்சல் புயல்: தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடி ஒதுக்கிய மத்திய அரசு!!

ஃபெஞ்சல் புயல்: தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடி ஒதுக்கிய மத்திய அரசு!!
X

Central Govt

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழகத்திற்கு முதற்கட்டமாக ரூ. 2 ஆயிரம் கோடி நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டிய தொகையில் இந்த தொகை (ரூ. 944.80 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story