பெரியார் நினைவகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

பெரியார் நினைவகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

 CM Stalin

கேரளாவில் பெரியார் நினைவகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களிலும், கோவிலுக்கு எதிரே உள்ள தெருவிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் முதலான சமுதாயத்தினர் நடந்து செல்லவே கூடாது என்னும் கொடிய தடை இருந்தது. அந்தத் தடையை நீக்கக்கோரி 1924-ம் ஆண்டு வைக்கம் போராட்டம் நடைபெற்றது. வைக்கம் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதால் தந்தை பெரியார் "வைக்கம் வீரர்" எனப் போற்றப்பட்டார். கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் கோவில் நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துள்ளது. தந்தை பெரியார் சமூகநீதி காக்க போராடிப் பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில், தந்தை பெரியா ருக்கு வைக்கத்தில் நினைவுச் சின்னம் அமைக்க உத்தரவிடப்பட்டு 1994-ம் ஆண்டு நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடத்தை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ரூ.8 கோடியே 14 லட்சம் ரூபாயில் புனரமைக்கப்பட்டு உள்ளது. அங்கு புதுப்பொலிவாக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறப்பு விழா இன்று காலையில் நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நினைவகத்தை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து 2024-ம் ஆண்டுக்கான வைக்கம் விருதினை மைசூர் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான தேவநூர மஹாதேவாவுக்கு, விருதுடன் ரூ.5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர்கள் துரை முருகன், எ.வ.வேலு, மு.பெ. சாமிநாதன், கேரள மந்திரிகள் வி.என். வாசவன், சஜிசெரியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பிரான்சிஸ் ஜார்ஜ் எம்.பி, சி.கே. ஆஷா எம்.எல்.ஏ, கோட்டயம் கலெக்டர் ஜான்வி, சாமுவேல், வைக்கம் நகர்மன்ற தலைவர் பிரீத்தா ராஜேஷ், நகர்மன்ற கவுன்சிலர் ராஜசேகர் பங்கேற்றனர்.இதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை சென்னை திரும்புகிறார்.

Tags

Next Story