காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு ?

காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு ?

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்ய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராகுல் காந்தி குஜராத்தில் இருந்ததால் காணொளி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் டெல்லி சட்டீஸ்கர் கர்நாடகா தெலுங்கானா கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் வேட்பாளர்கள் தேர்வு விவாதிக்கப்பட்டது.

இதில் ராகுல் காந்தி வயநாட்டிலும், சசிதரூர் திருவனந்தபுரத்திலும் மீண்டும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story