காங்கிரஸ் தான் முடிவு செய்யும்..! தோழமை வேறு.. கட்சி வேறு ..! - செல்வப் பெருந்தகை அதிரடி!

காங்கிரஸ் தான் முடிவு செய்யும்..! தோழமை வேறு.. கட்சி வேறு ..! - செல்வப் பெருந்தகை அதிரடி!

செல்வப் பெருந்தகை 

இனி கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

கோவையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, ''தமிழகத்தில் 57 ஆண்டாக ஆட்சி அமைக்க முடியாமல் இருக்கிறோம். சிறிய கட்சிகள் கூட நாங்கள் ஆட்சி அமைப்போம் என்கின்றனர். அதனால், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்போம் என்று கூறுவதில் எவ்வித தவறும் இல்லை. எங்கள் கட்சியை நாங்கள் வலிமைப்படுத்தினால் தோழமை கட்சிகளும் வலிமை பெறும். எங்கள் கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்துவது எங்களின் அடிப்படை உரிமை. இப்போதைய சூழலில் ராகுல் காந்தியின் கரத்தை பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. தமிழகத்தில் காங்கிரசை முதன்மை கட்சியாக மாற்றுவதற்கு நிர்வாகிகள் ஆலோசனைகள் வழங்க வேண்டும். தோழமை என்பது வேறு, கட்சியை பலபடுத்த வேண்டுமென்பது வேறு. 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் காமராஜரின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியினரின் ஆசை'' என்று தெரிவித்தார்.

Tags

Next Story