நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் - பிரதமர் மோடி !
பிரதமர் மோடி
18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது:
உலகின் மிகப் பெரிய தேர்தல் சுமூகமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் மிகவும் முக்கியமானதும் கூட. நாடு விடுதலைக்குப் பின்னர் தொடர்ந்து 2-வது முறையாக நாட்டு மக்களுக்கு சேவையாற்ற 3-வது முறை வாய்ப்பளித்துள்ளனர். 60 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டு மக்களுக்கு பணியாற்ற மக்கள் தொடர்ந்து 3-வது முறையாக வாய்ப்பளித்திருக்கின்றனர்.
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று புதிய தொடக்கம். நாடு விடுதலைக்குப் பின்னர் முதல் முறையாக நாம் கட்டிய நமக்குச் சொந்தமான புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். வழக்கமாக எம்பிக்கள் நாடாளுமன்ற பழைய கட்டிடத்தில்தான் பதவியேற்று வந்தனர். புதிய எம்.பிக்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.