பாஜகவில் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் ஊழல் வழக்கு நிறுத்திவைப்பு!

பாஜகவில் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் ஊழல் வழக்கு நிறுத்திவைப்பு!

பாஜக

கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில், ஊழல் வழக்குகளை எதிர்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேர் பாஜகவில் சேர்ந்துள்ளனர்.

பாஜகவில் சேர்ந்த 25 பேரில் 3 பேருக்கு எதிரான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், 20 பேருக்கு எதிரான ஊழல் வழக்கில் விசாரணை ஏதுமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஊழல் வழக்குகளுக்கு பயந்து அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 10 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவில் இருந்து தலா 4 பேரும், திரிணாமுல் காங்கிரஸில் இருந்து 3 பேரும் பாஜகவில் சேர்ந்துள்ளனர்.

தெலுங்கு தேசம் கட்சியில் 2 பேரும், சமாஜ்வாதி, YSR காங்கிரஸில் இருந்து தலா ஒருவரும் விலகி பாஜகவில் சேர்ந்தனர்.

பாஜகவுடன் சேர்ந்ததால் ஆதாயமடைந்த 25 பேரில் அஜித் பவார், பிரபுல் பட்டேல் உள்ளிட்ட 12 பேர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story