பாராளுமன்றத்தில் வண்ண புகை வீசியது தொடர்பாக டில்லி போலீஸ் வட்டாரங்கள் கருத்து

பாராளுமன்றத்தில் வண்ண புகை வீசியது தொடர்பாக டில்லி போலீஸ் வட்டாரங்கள் கருத்து

பாராளுமன்றத்தில் வண்ண புகை

பாராளுமன்ற மக்களவையில் இருவர் வண்ண புகைளை வீசிய சம்பவம், பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு வெளிச்சம் போட்டு காட்டியது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பாராளுமன்றத்தில் வண்ண புகை வீசியது தொடர்பாக டில்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

கைது செய்யப்பட்ட நான்கு பேரும், ‛பகத் சிங் பேன் கிளப்' என்ற சமூக வலைதள பக்கத்துடன் தொடர்புடையவர்கள். இவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் மைசூருவில் சந்தித்து திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியிருந்தனர். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மீண்டும் சண்டிகர் விமான நிலையம் அருகே சந்தித்து தங்களது திட்டம் குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தியிருந்தனர்.

கடந்த ஜூலை மாதம், லக்னோவில் இருந்து டில்லி வந்த சாகர் சர்மா, பார்லிமென்டிற்கு உள்ளே செல்ல முயற்சித்துள்ளார். ஆனால், முடியாத காரணத்தினால், வெளியில் இருந்து பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து உன்னிப்பாக கவனித்து உள்ளனர்.

மீண்டும் கடந்த 10ம் தேதி ஒருவர் பின் ஒருவராக டில்லி வந்தடைந்தனர். அங்கு குழல் வழியே புகையை பீய்ச்சியடிக்கும் கருவி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

லக்னோவின் மணக்நகரை சேர்ந்தவர் சாகர் சர்மா. மின்சார ரிக்ஷாவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்துள்ளார். இடதுசாரி கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். அது குறித்த பதிவுகளை தனது பேஸ்புக் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வந்துள்ளார். இந்த பக்கம் சில மாதங்களாக செயல்படாமல் இருந்தாலும், அதன் மூலம் ராஜஸ்தான், கோல்கட்டா மற்றும் ஹரியானா மாநிலங்களை சேர்ந்த சிலருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இவர் லோக்சபாவில் அத்துமீறிய தகவல் அறிந்ததும், அவரது தந்தை, தாயார் மற்றும் தங்கை வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளனர். இவர்கள் உன்னவ் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். 20 ஆண்டுகளாக லக்னோவில் வசித்து வருகின்றனர். அவரின் திட்டம் குறித்து குடும்பத்தினர் உட்பட யாருக்கும் தெரியாது என உறவினர்கள் கூறியுள்ளனர். மின்சார ரிக்ஷாவை வாடகைக்கு கொடுத்த நபர், சாகர் சர்மா நல்லவர் எனக்கூறியுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

டில்லி போலீசார் கூறுகையில், இந்த சம்பவத்தில் இன்னும் இரண்டு பேரை தேடி வருகிறோம். கைதான 4 பேர் மற்றும் தலைமறைவான இருவரும் பார்லிமென்டிற்குள் செல்ல முயன்றுள்ளனர். ஆனால், சாகர் சர்மா மனோ ரஞ்சன் மட்டுமே உள்ளே செல்ல முடிந்தது. இந்த சம்பவத்திற்கு வேறு யாரும் பின்னணியில் உள்ளனரா, மூளையாக செயல்பட்டது யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

Tags

Next Story