கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா பாஜக தலைமைக்கு எதிராக போர்க்கொடி!
ஈஸ்வரப்பா
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அந்த வகையில் ஷிமோகா மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், ஈஸ்வரப்பா தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி சென்ற ஈஸ்வரப்பாவை சந்திக்க அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். ஷிவமோகா மக்களவைத் தொகுதியில் போட்டியிட கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பாவுக்கு பாஜக மேலிடம் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால், கர்நாடக மாநில பாஜக தலைமைக்கு எதிராக அவர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
எடியூரப்பாவின் மகனை எதிர்த்து 'ஷிமோகா' தொகுதியில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார்.
மேலும் பாஜகவில் வாரிசு அரசியலுக்கு பாடம் புகட்ட வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக ஈஸ்வரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.