திருப்பதி கோவிலில் ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியீடு!!

திருப்பதி கோவிலில் ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியீடு!!

Tirupati 

திருப்பதியில் பக்தர்களின் சிரமத்தை போக்க தேவஸ்தானம் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது.

திருப்பதியில் பக்தர்களின் சிரமத்தை போக்க தேவஸ்தானம் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 22-ந் தேதி மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ஹர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் வரும் 21-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதே நாள் மாலை 3 மணிக்கு மெய் நிகர் சேவை டிக்கெட் வெளியிடப்படுகின்றன. 23-ந்தேதி காலை 10 மணிக்கு அங்க பிரதட்சன டோக்கன்கள் வெளியிடப்பட உள்ளன. வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்களும், மாலை 3 மணிக்கு வாடகை அறைகள் முன்பதிவு நடைபெறுகிறது. கடந்த 3 நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் கிருஷ்ண தேஜா கெஸ்ட் ஹவுஸ் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் நேற்று 72, 072 பேர் தரிசனம் செய்தனர். 30,384 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.16 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags

Next Story