தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா JDS கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!
பிரஜ்வால் ரேவண்ணா
தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா JDS கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா ஆபாச வீடியோ காட்சிகள் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இன்று மத சார்பற்ற ஜனதா தள கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது.
ரேவண்ணாவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என மூத்த நிர்வாகிகள், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் வலியுறுத்திய நிலையில் விசாரணை முடியும் வரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
மேலும் ஆபாச வீடியோக்கள் வெளியானது தொடர்பாக விளக்கமளிக்க உத்தரவிட்டு பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம்(JDS) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Next Story