வெளிநாட்டுப் பத்திரிகையாளர் வெளியேற்றம்! மத்திய அரசின் அழுத்தமா?
செபாஸ்டின் பார்சிஸ்
மத்திய அரசின் அழுத்தத்தால் மேலும் ஒருவெளிநாட்டுப் பத்திரிகையாளர் இந்தியாவை விட்டு வெளியேறினார்.
இந்தியாவில் 13 ஆண்டுகள் பணியாற்றி வந்த பிரெஞ்ச் பத்திரிகையாளர் செபாஸ்டின் பார்சிஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டதாக கூறியுள்ளார்.
தனது பணி அனுமதியை எந்த காரணமும் தெரிவிக்காமல் இந்திய உள்துறை அமைச்சகம் புதுப்பிக்க மறுத்துள்ளதாக செபாஸ்டின் பார்சிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் அதிகரிக்கும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மீதான அடக்குமுறை போக்கினை இது வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் 5 வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு மத்திய அரசு பணி அனுமதியை புதுப்பிக்காததால் நாட்டை விட்டு வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story