ஜெய்ப்பூரில் எரிவாயு டேங்கர் தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!!

fire accident
ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்க் அருகில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. பெட்ரோல் பங்க் தீ விபத்தில் சிக்கி பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 37 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தைத் தொடர்ந்து பத்து வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், பெட்ரோல் பங்கில் பிடித்த தீயை அணைக்க போராடி வருகின்றனர். இன்று அதிகாலை 5.30 மணியளவில் பெட்ரோல் பங்கில் ரசாயனம் ஏற்றி சென்ற லாரி மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் தீப்பிடித்தது. ரசாயனம் ஏற்றிச்சென்ற லாரியில் பிடித்த தீ, அருகில் இருந்த வாகனங்களுக்கும் பரவியதாக தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்து அரங்கேறிய சம்பவ இடத்திற்கு ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தீ விபத்தில் காயமுற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர், காயமுற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களை வலியுறுத்தினார். தீ விபத்து குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு டேங்கர் தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், நான் எஸ்.எம்.எஸ். மருத்துவமனைக்குச் சென்று உடனடியாக தேவையான மருத்துவத்தை வழங்குமாறு அங்குள்ள மருத்துவர்களுக்கு உத்தரவிட்டேன். வசதிகள் மற்றும் காயமுற்றவர்களை சரியான முறையில் கவனித்துக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தினேன். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.