போலந்துடனான நட்புறவு வலுப்பெறும்!

போலந்துடனான நட்புறவு வலுப்பெறும்!

பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இரண்டு நாள் போலந்து பயணம் நிறைவடைந்த நிலையில் இன்று உக்ரைன் பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமர் மோடி, ஐரோப்பிய நாடுகளான போலந்து மற்றும் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். போலந்தில், அந்நாட்டு பிரதமர் டொனால்டு டஸ்க்கை நேற்று சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

போலந்து கபடி சம்மேளனத்தின் தலைவர் மைக்கேல், கபடி வாரிய உறுப்பினர் அன்னா கல்பர்சிக், கபடி வீரர்கள் ஆகியோரையும் மோடி சந்தித்தார். போலந்தில் கபடியை முன்னேற்றுவதற்கும், ஐரோப்பாவில் விளையாட்டை பிரபலப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார்.

இந்தியாமற்றும் போலந்து இடையே இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவும், போலந்தும் கபடி விளையாட்டின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இந்த விளையாட்டு இந்தியா வழியாக போலந்தை அடைந்தது; அவர்கள் அதை பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து 2 ஆண்டுகள், ஐரோப்பிய கபடி சாம்பியன் பட்டத்தை போலந்து கைப்பற்றியுள்ளது.

Tags

Next Story