டெல்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன், ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!
ஆர்.என். ரவி தர்மேந்திர பிரதான்
டெல்லியில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார். நேற்று பிரதமரை சந்தித்த நிலையில், இன்று ஒன்றிய அமைச்சரை சந்தித்தார்.
சட்டப்பேரவையில், நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மத்திய கல்வி அமைச்சரை ஆளுநர் சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் உயர் கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் முறைகள் பற்றி விவாதித்ததாக ஆளுநர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது எக்ஸ் வலைதளத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார்.
Next Story