பீகாரில் வெப்ப அலை எதிரொலி - ஜூன் 8 வரை பள்ளிகளுக்கு விடுப்பு !!

பீகாரில் வெப்ப அலை எதிரொலி - ஜூன் 8 வரை பள்ளிகளுக்கு விடுப்பு !!

பள்ளிகளுக்கு விடுப்பு

இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. டெல்லி உத்தரப்பிரதேசம் பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸ் தாண்டி வெயில் கொளுத்துகிறது.

இதனால் வெப்ப காற்று வீசுகிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். ஷேக்பூரா என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்து வந்த மாணவிகள் வெப்ப அலையால் அடுத்தடுத்து மயக்கம் அடைந்துள்ளனர்.

இதனால் அவர்களுக்கு தண்ணீர் வழங்கி முதலில் முதலுதவி அளித்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்த வெகுசாரா என்ற இடத்திலும் மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகாரில் ஜூன் 8- தேதி வரை பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்க உத்தரவிட்ட முதல் மந்திரி நிதிஷ்குமார் வெப்ப அலை பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story